×

பெண் காவலருடன் தகராறு செய்த 2 வாலிபர்கள் கைது

 

மதுரை, மே 18: மதுரையில் மது போதையில் பெண் காவலரை அவதூறாக பேசிய போலீசார் கைது செய்தனர். மதுரையை அடுத்த திருப்பாலை காவல் நிலைய போலீசார், அய்யர் பங்களா பகுதியில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, முதல்நிலை காவலரான பஞ்சு என்பவர், டூவீலரில் வந்த இருவரை நிறுத்தி மது அருந்தியுள்ளனரா என, சோதனை செய்ய முயன்றார்.

அவரது பணிகளை தடுத்து நிறுத்திய வாகனத்தில் வந்த இருவரும், முதல்நிலை காவலரை அவதூறான வார்த்தைகளில் பேசி, தகராறு செய்தபின் தப்பிச் சென்றனர். இது குறித்து, பஞ்சு அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த திருப்பாலை போலீசார், கே.புதூரைச் சேர்ந்த அஜய் ஆனந்த் (36), ஆத்திகுளத்தைச் சேர்ந்த சூர்யா (32) ஆகியோரை கைது செய்தனர்.

The post பெண் காவலருடன் தகராறு செய்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tiruppalai police station ,Iyer ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...