×

டெல்டா மாவட்டத்தில் பருத்தியை அதிகம் தாக்கும் சப்பாத்தி கள்ளி பூச்சி விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டை, மே 14: டெல்டா மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் சப்பாத்தி கள்ளி பூச்சி தாக்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை போன்ற மாவட்டங்களில் நிலத்தடி பெரும்பான்மையான பகுதியில் இல்லாததால் மேட்டூர் அணை பாசனத்தை நம்பி விவசாயிகள் குறுவை, தாளடி, சம்பா சாகுபடி செய்து வந்தனர். தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் பொரும்பான்மையான பகுதியில் குறைவான அளவில் கிடைக்கும். மேட்டுர் அணை தண்ணீர் மற்றும் மழை நீர் கொண்டு  சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து கோடை சாகுபடியாக  உளுந்து, பச்சை பயறு, எள் சாகுபடி  செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் மற்றும் ஆறுகளில் தேங்கியுள்ள தண்ணீரை கொண்டு சில விவசாயிகள்  திருமருகல், கீழ்வேளூர் போன்ற பகுதியில்  சுமார் 4  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது பருத்தி செடிகள் பூ வைத்து காய்க்க தொடங்கியுள்ளது. 4 மாதம் முதல் 7 மாதம் வரை மகசூல் கொடுக்க கூடிய  நிலையில் தற்போது கடுமையான வெயிலால் பருத்தி செடியில் சப்பாத்தி கள்ளி பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.  இந்த சம்பாத்தி கள்ளி பூச்சியால் செடியின் வளர்ச்சி குறைவதோடு  செடியில் பூ பூப்பது குறைந்ததோடு, பூத்து காய்க்கும் காய் மிக சிறியதாக உள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும் நிலையில் உள்ளது. இது பற்றி  விவசாயிகளுக்கு ஆலோசனை கூற வேளாண்மை துறை அதிகாரிகள் முன் வரவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகள்  சப்பாத்தி கள்ளி பூச்சி மற்றும் எலி பிரச்னையால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே வேளாண்மை துறையினர் சம்பாத்தி கள்ளி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வாங்குவதுடன்  அதற்கு தேவையான மருந்தை மாநிய விலையில் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : delta district ,
× RELATED அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...