×

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்

சென்னை: வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக 2 முறை சென்னை தலைமைச் செயலகத்திலும், கடந்த 6ம் தேதி தஞ்சாவூரில் டெல்டா மாவட்டத்தைச் சார்ந்த பிரதிநிதிகளுடனும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நேற்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற மாவட்டங்களை சார்ந்த விவசாயிகளிடம் காணொலி வாயிலாக கருத்து கேட்பு கூட்டம் வேளாண்மை இயக்குநரகத்தில் நடத்தப்பட்டது.

வேளாண்மை இயக்குநர் முருகேஷ் வரவேற்றார். கருத்துக் கேட்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து முதன்மை செயலாளர் அபூர்வா உரையாற்றினார். கருத்துக்கேட்புக் கூட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘ விவசாயிகளின் கருத்துக்களை அரசு நன்கு ஆராய்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கையினை தயாரித்திடும்’’ என தெரிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

The post அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Thanjavur, Delta district ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...