×

திருத்துறைப்பூண்டி பகுதியில் மின் கம்பங்களில் விளம்பர தட்டியால் விபத்து அபாயம்

திருத்துறைப்பூண்டி, மே 10: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பகுதியில் மின் கம்பங்களில் யாருடைய அனுமதி பெறாமலும் அதிக அளவில் விளம்பர தட்டிகளை வைத்திருப்பதால் அவசர தேவைக்கு மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பத்தில் ஏறி பணி செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் விளம்பர தட்டிகள் பலத்தகாற்று வீசும் போது சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீது விழுந்து காயம் ஏற்படுகிறது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பகுதியில் மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்களில் பெரிய அளவில் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது குறித்து தினகரனில் செய்தி வெளியிட்ட பிறகு விளம்பர தட்டிகளை அகற்றப்படும்.

இந்நிலையில் தற்போது மீண்டும் திருத்துறைப்பூண்டி ஒன்றியம், நகரம் முழுவதும் அனைத்து மின்கம்பங்களிலும் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்களில் உள்ள விளம்பர தட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள்மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...