×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 3கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளை

பாப்பிரெட்டிப்பட்டி, மே 10: பாப்பிரெட்டிப்பட்டி அருகே அடுத்தடுத்த 3கடைகளின் ஷட்டரை உடைத்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பேரூராட்சி அலுவலகம் அருகே ஜவுளி கடை உள்ளது. இந்த கடைக்கு அருகே ஜூஸ் கடையும், தனியார் பல் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள், இரும்புகம்பியால் இந்த கடைகளின் ஷட்டரை ஆள்நுழையும் அளவிற்கு அகலப்படுத்தி உள்ளே நுழைந்துள்ளனர். இதில், ஜூஸ் கடையில் ₹5,400ம், ஜவுளி கடையில் ₹6,000ஐ திருடி சென்றுள்ளனர். பல் மருத்துவமனையில், பணம் எடுத்தும் கிடைக்காததால் திரும்பி சென்றனர். இதுகுறித்து கடைக்காரர்கள், பொம்மிடி போலீசில் புகார் அளித்தன் ேபரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Tags : shops ,Pappirippatti ,
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்