×

ஈரோட்டில் மறுவாக்கு பதிவுக்கு காரணமான வாக்குசாவடி அலுவலர்களுக்கு நோட்டீஸ்

ஈரோடு, மே 10: ஈரோடு மக்களவை தொகுதியில் ஒரு வாக்குசாவடியில் மாதிரி வாக்குபதிவில் பதிவான வாக்குகளை அழிக்காமல் வாக்குபதிவு நடத்தியதால் தற்போது மறுவாக்கு பதிவு நடத்தப்படுகிறது. இதற்கு காரணமான அலுவலர்களுக்கு `17 பி மெமோ’ நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தமிழகம் முழுவதும் 13 வாக்குசாவடிகளில் மாதிரி வாக்குகளை அழிக்காமல் வாக்கு பதிவு தொடங்கியதையடுத்து வரும் 19ம் தேதி மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மறுவாக்குபதிவுக்கு காரணமான வாக்குசாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வாக்கு பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் வாக்குசாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில், மாதிரி வாக்கு பதிவு நடத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது.

மாதிரி வாக்கு பதிவு முடிந்ததும் வாக்குசாவடி முகவர்கள் முன்னிலையில் பதிவான வாக்குகளை அழித்துவிட வேண்டும். அதன்பின் தான் வாக்குபதிவு தொடங்க வேண்டும். வாக்குசாவடி பணியில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி முகாமில் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டதோடு படக்காட்சி மூலமாகவும் விளக்கப்பட்டன. இருப்பினும், பணியில் கவனக்குறைவாக இருந்த காரணத்தில் ஒரு வாக்குசாவடியில் தற்போது மறு வாக்குபதிவு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குசாவடி தலைமை அலுவலர் தான் இதற்கு முழு பொறுப்பு. எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் 17 (பி) மெமோ நோட்டீஸ் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் கொடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : applicant officials ,Erode ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...