×

அரசு ஐடிஐயில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற விண்ணப்பம்

நாகர்கோவில், மே 10:  குமரி மாவட்ட செய்தி மக்கள் ெதாடர்பு அலுவலக செய்திகுறிப்பு: தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயின்று, தேர்ச்சி பெற்று தேசிய தொழிற் சான்றிதழ்  (என்டிசி) பெற்று அப்ரண்டீஸ் ஆக்ட் 1961-ன் கீழ் தொழிற்சாலைகள் மூலமாக அப்ரண்டீஸ் பயிற்சி பெறாதவர்களும் மற்றும் அப்ரண்டீஸ் ஆக்ட் 1961-ன் கீழ் அப்ரண்டீஸ் பயிற்சி அமல்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்களும், மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (என்ஏசி) பெற விரும்பினால் தனித்தேர்வர்களாக மத்திய அரசால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

கருத்தியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் தேர்வு மே 29 முதல் 31 வரை ஆன்லைன் முறையிலும், பொறியியல் வரைபடத்தேர்வு ஜூன் 11 காலை 9.30 மணிக்கும், செய்முறைத் தேர்வு ஜூன் 12 முதல் 14 வரை காலை 9.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உதவி இயக்குநர், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலகம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்,  கோணம், நாகர்கோவில்-4 என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று விபரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ITI ,
× RELATED சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு