×

நாகர்கோவில் அருகே ரயில் மோதி தொழிலாளி பலி தந்தை இறந்த 2 மாதத்தில் சோகம்

நாகர்கோவில், மே 22 : நாகர்கோவில் ஆணைப்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்தது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் இடலாக்குடி பரசுராமன் தெருவை சேர்ந்த பழனி என்பவரின் மகன் கணேசன் (30) என்பது தெரிய வந்தது. வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாக வில்லை. தந்தை இறந்து 2 மாதம் தான் ஆகிறது. நேற்று முன் தினம் இரவு ஆணைப்பாலம் வழியாக தண்டவாளத்தில் நடந்து செல்லும் போது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவில் அருகே ரயில் மோதி தொழிலாளி பலி தந்தை இறந்த 2 மாதத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி...