×

கடையநல்லூர் கோயிலில் 16ம் தேதி வைகாசி பிரமோற்சவ தேரோட்டம்


கடையநல்லூர், மே 10:  கடையநல்லூரில் உள்ள பிரசித்திப் பெற்ற முப்பிடாதி அம்மன் கோயிலில், ஆண்டுேதாறும் வைகாசி பிரமோற்ச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலையில் அம்பாள் தீர்த்த உற்சவம், காப்புகட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலையில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் பால்குடம் ஊர்வலம், பூந்தட்டு, மாக்காப்பு அலங்கார தீபாராதனை, இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 16ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 3.15 மணிக்கு தேரோட்டம், இரவு 9 மணிக்கு ஊஞ்சல் தீபாராதனை, அம்பாள் தேர் தடம் பார்த்தல் நடக்கிறது. 17ம் தேதி காலையில் பால்குடம், மாலையில் முளைப்பாரி ஊர்வலம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருணாசலம், செயல் அலுவலர் முருகன் மற்றும் அனைத்து சமுதாய கட்டளைதாரர்கள், விழா கமிட்டியினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : temple ,Mayor ,Kadayanallur ,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்