×

மேலநத்தம் ஆற்றங்கரை சுடலை மாடசாமி கோயிலில் 14ம்தேதி கொடை விழா

நெல்லை,மே 10:  நெல்லை டவுன் மேலநத்தம் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை மண்டகப்படி சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழா கடந்த 3ம்தேதி கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து இன்று (10ம்தேதி) இரவு உள்ளூர் சுடலைமாடசுவாமிக்கு கொடைவிழா நடக்கிறது. இதைதொடர்ந்து வரும் 13ம்தேதி ஆற்றங்கரை மண்டகப்படி சுடலை மாடசாமி கோயில் கொடியழைப்பும், இரவு 12 மணிக்கு சுவாமிக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

 கொடை விழாவான 14ம் தேதி அன்று அதிகாலை 5 மணிக்கு சிவனனைந்த பெருமாளுக்கு தீபாராதனையும், காலை 9 மணிக்கு சிறப்பு கும்பாபிஷேகமும் பகல் 12 மணிக்கு பாயாச திரழையுடன் மதிய கொடை விழாவும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு இருளப்ப சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், 10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு படைப்பு தீபாராதனையுடன் சாமகொடை விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.

Tags : celebration ,Madasamy Temple ,river ,Malanadam ,
× RELATED திமுக வெற்றி கொண்டாட்டம்