×

காரிமங்கலம் பகுதியில் வறட்சியால் கருகும் மா மரங்கள்

காரிமங்கலம், மே 9: காரிமங்கலம் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், தண்ணீரின்றி மா மரங்கள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர்.காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான எலுமிச்சினஅள்ளி, பொம்மஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், கெண்டிகானஅள்ளி, பேகாரஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் மா சாகுபடி செய்துள்ளனர். இதில், பெங்களூரா, மல்கோவா, செந்தூரம், நீலம், பங்கனபள்ளி உட்பட பல்வேறு வகை மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் மா வகைகள், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மாங்கூழ் உற்பத்தியிலும், மாம்பழ ஏற்றுமதியிலும் இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் மா வகைகள் பங்கேற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மா பிஞ்சுகள் வெம்பி வருகிறது. வேறு வழியின்றி விவசாயிகள் சிலர் மட்டும், ஒரு லோடு டிராக்டர் தண்ணீரை ₹600 முதல் ₹900 வரை விலைக்கு கடன் வாங்கி மா மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். ஆனால் எல்லா விவசாயிகளும் இது போல் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்ற வசதியின்றி தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் வறட்சி மற்றும் கோடை வெப்பத்தின் காரணமாக, மா சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gulf of Gharmangalam ,
× RELATED காரிமங்கலம் பகுதியில் தண்ணீரின்றி கருகிய பருத்தி செடிகள்