×

குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க மேம்பாலம் கட்ட ேவண்டும்

தர்மபுரி, மே 9: தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க, மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து குண்டல்பட்டி  ெபங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் சாலையை கடக்க முடியாதபடி சாலை மூடப்பட்டது. இதையடுத்து தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள் பழைய தர்மபுரி, சவுளுப்பட்டி வழியாக பெங்களூரு நோக்கி சென்றன. இதனால் முத்துப்பட்டி, கொளகத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்டல்பட்டி அடுத்த கால்நடை ஆராய்ச்சி மையம் அருகே சென்று, தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

இதனால் குண்டல்பட்டி சந்திப்பில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குண்டல்பட்டி சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்காக ஆய்வு செய்தனர். இதையடுத்து மேம்பாலம் கட்டுவதற்காக குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி மையம், மல்லிக்குட்டை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையம் சார்பில், ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் டூவீலர்கள், கார்கள், லாரிகள், பஸ்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த பணி முடிந்து ஓராண்டாகியும் இதுவரை குண்டல்பட்டி அருகே மேம்பாலம் கட்டுவதற்கான எந்த அடிப்படை பணிகளும் நடக்கவில்லை. எனவே முத்தப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சுற்றி செல்வதை தவிர்க்கவும், விபத்துக்களை தடுக்கவும் உடனடியாக குண்டல்பட்டி அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : highway ,National Highway ,Kundalpatti ,
× RELATED சென்னை ஆவடி தேசிய நெடுஞ்சாலையில்...