×

சேற்றில் சிக்கி புள்ளிமான் பலி

கீழக்கரை, மே 9: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் வாவுடையார் முனியய்யா கோயில் அருகில் வாகையடி ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் சுமார் ஒன்றரை வயதுடைய புள்ளிமான் தண்ணீர் குடிக்க வந்தது. தண்ணீர் குடிக்க முயன்றபோது ஊரணியின் சேற்றில் சிக்கி மீளமுடியாமல் பலியானது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனச்சரகர் சிக்கந்தர்பாட்ஷா தலைமையில், வனவர் சுதாகர், வனக்காப்பாளர் சந்திரசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமான் உடலை மீட்டு ஏர்வாடி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடை மருத்துவர் பகவத்சிங் பிரேதபரிசோதனை செய்தார். அதன்பிறகு புள்ளிமான் அடக்கம் செய்யப்பட்டது.

Tags :
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்