×

செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி பிளஸ்-2 அறிவியலில் சிறப்பிடம்

காரைக்குடி, மே 14: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சிபிஎஸ்இ இன்டர்நேஷனல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர் தர்ஷினி பெருமாள்சாமி அறிவியல் பாடத்தில் 500க்கு 483 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். இவர் கணிதம்-95, ஆங்கிலம்-100, இயற்பியல்-96, வேதியியல்-96, உயிரியல்-96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஷ்ரவியா 500க்கு 478 மதிப்பெண் பெற்றுள்ளார். சிவசவுந்தரி 500க்கு 469 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் ஒருவர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 27, இயற்பியல் 18, வேதியியலில் 15, உயிரியலில் 12, கணிதத்தில் 9, கணினி அறிவியலில் 15 பேர் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளிகுழும தலைவர் செல்லப்பன், பள்ளிகுழும தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்தியன், கல்வி சார் இயக்குநர் முனைவர் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

The post செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி பிளஸ்-2 அறிவியலில் சிறப்பிடம் appeared first on Dinakaran.

Tags : Chellappan Vidyamandir School Plus- ,in Science ,Karaikudi ,Chellappan Vidyamandir ,CBSE International School ,Darshini Perumalsamy ,Chellappan Vidyamandir School ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்