×

மாவட்டத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

ஊட்டி, மே 9: ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  ஆண்டு  தோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை நீலகிரியில் மழை பெய்யும்.  இது போன்ற சமயங்களில் தாழ்வான பகுதி நீரோடைகள், குளங்கள் மற்றும்  குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். தாழ்வான பகுதிகளில் மழை நீர்  தேங்கும் சமயங்களில விவசாயம் மேற்க்கொள்ள முடியாது. அதே சமயம் சமன்  பகுதிகள் மற்றும் மலைப் பாங்கான பகுதிகளில் விவசாயிகள் விவசாயம்  மேற்கொள்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த  சமயத்தில் பெய்தாலும், வடகிழக்கு பருவமழை விவசாயிகளை ஏமாற்றியது. மேலும்,  கோடை மழையும் மிகவும் தாமதமாகவே துவங்கியது. இதனால், விவசாயிகள்  ஏமாற்றமடைந்தனர்.

இதற்கிடையே டிச., மாதம் முதல் பிப்., மாதம் வரை  பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இரு மாதங்கள் வெயிலின் தாக்கமும்  அதிகமாக காணப்பட்டது. இதனால், தேயிலை செடிகள் கருகி போயின. மலை காய்கறி  விவசாயமும் பாதித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது  நீலகிரியில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற  பகுதிகளில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், விவசாய நிலங்களில்  உள்ள நீர் ஆதாரங்களில் தண்ணீர் அளவு உயரத்துவங்கியுள்ளன. அதேசமயம் பூமியும்  ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. நேற்று முன் தினம் சில மணி நேரம் ஊட்டி  மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் நேற்றும் ஊட்டி  மற்றும் புறநகர் பகுதிகளில் மழை துளிகள் விழுந்தன. தொடர் மழையால்  தற்போது நீர் நிலைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் அளவு சற்று உயர்ந்து  வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து ஒரு சில  தினங்கள் இதே போன்ற கன மழை பெய்தால், தண்ணீர் பிரச்னை இருக்காது என  பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Rain farmers ,district ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...