×

பிரசவத்தின் போது ஒருவர் உடன் இருக்கலாம்

கோவை, மே.9:  பிரசவத்தின் போது ஒருவர் உடன் இருக்கலாம் என்கிற விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளதாகவும், அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். உலக அன்னையர் தினம் வரும் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை பேரெண்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் குமுதா சந்திரிகா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமைதியான மகிழ்வான பேறு காலம் மற்றும் பிரசவம் மேற்கொள்ள “Heart in the Tummy 2” என்ற விழிப்புணர்வு நிகழ்வினை வரும் 12ம் தேதி நடத்த உள்ளோம். பாப்பீஸ் விடுதியில் நடைபெறும் இந்நிகழ்வில் பர்த் இந்தியா அமைப்பின் நிறுவனர் ரூத் மாலிக், மகப்பேறியில் மற்றும் பெண்ணியல் மருத்துவர் பிரமலதா, பாலூட்டுதல் ஆலோசகர் யபத் யாஸ்மின், சுக பிரசவ ஆலோசகர் பிரியங்கா இதிசுலா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில், பிரசவம் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல் நடைபெறும். சிசேரியன் மூலம் முதல் பிரசவம் ஆகி இருப்பின், அடுத்த குழந்தையும் அதேபோல் சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்க வேண்டும் என்பது இல்லை என பலருக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் குழந்தை வளர்ப்பு குறித்து தாய்மார்களுக்கு விளக்கும் வகையில், இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

அரசு மருத்துவனையில் உள்ள தாய்பால் வங்கிக்கு கைவிடபட்ட குழந்தைகளுக்கு வழங்கிட போதுமான அளவு தாய்பால் தானம் கிடைக்க பெறுவதில்லை. ஆரம்பத்தில் 2-3 பேர் மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது எங்கள் அமைப்பை சேர்ந்த 20 முதல் 30 பேர் தாய்ப்பால் தானமாக வழங்கி வருகின்றனர். ஆனால், இது கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க போதுமானதாக இல்லை. இது குறித்து இன்னும் போதுமான விழிப்புணர்வு மக்களிடையே சென்று அடையவில்லை. பிரசவத்தின் போது உடன் இருந்த கணவர்கள் தங்களது எண்ணங்களை இந்த நிகழ்வின்போது பேச உள்ளனர். பிரசவத்தின் போது ஒருவர் உடன் இருக்கலாம் என்ற சட்டம் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : delivery ,
× RELATED புனேவில் ரூ.1,100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்