×

மார்ச் மாதம் வரவேண்டிய பதவி உயர்வு தாமதத்தால் போலீஸ் ஏட்டுகள் அப்செட்

திருப்பூர், மே 8:தமிழ்நாடு போலீஸ் துறையில் அளிக்க வேண்டிய பதவி உயர்வை இன்னும் அளிக்காமல் தாமதப்படுத்தி வருவதால் போலீஸ் ஏட்டுகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். தமிழ்நாடு போலீஸ் துறையில் வழக்கமாக தேர்வுகள் மூலம் பதவி உயர்வு அளிக்கப்படும். இதில், அரசியல் குறுக்கீடு ஏற்படுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த போக்கினை தவிர்க்க, இரண்டாம் நிலை காவலகராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு, முதல் நிலை காவலராகவும், பின் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு தலைமை போலீசாகவும் பதவி உயர்வு கிடைக்கும். இதில் மேலும் 10 ஆண்டுகள் பணிகாலத்தில் குற்றச்செயல்கள் ஏதும் செய்யாமல் இருந்தால் சிறப்பு எஸ்ஐயாகவும் பதவி உயர்வு வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்பொழுது தலைமை போலீசாக உள்ளவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்கவில்லை. என குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள தலைமை போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரில் பணியாற்றும் தலைமை போலீசாருக்கு  இதுவரை பதவி உயர்வு வழங்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

Tags :
× RELATED காலநிலை மாற்றத்தால் நோய் தாக்காமல்...