×

தேங்காய் பருப்பு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

காங்கயம், மே 23: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே நால்ரோடு பகுதியில் தேங்காய் பருப்புகளை ஏற்றிக் கொண்டு லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. பரஞ்சேர்வழி பகுதியில் சென்ற போது லாரியில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது.கண் இமைக்கும் நேரத்தில் லாரியில் இருந்த கொப்பரைகளில் பற்றியதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற காங்கயம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லாரியில் கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் முழுவதும் எரிந்தது. லாரியும் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது.தீ விபத்திற்கான காரணம் குறித்து காங்கயம் தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தேங்காய் பருப்பு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Nalrod ,Tirupur district ,Parancherway ,Dinakaran ,
× RELATED காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு...