×

வனத்துறை வெளியிட்டுள்ள புதிய யானை வழித்தட வரவு அறிக்கை ரத்து கோரி கோட்டாட்சியரிடம் மனு

 

கூடலூர்மே24: தமிழக அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள புதிய யானை வழித்தட அறிக்கையை முழுமையாக ரத்து செய்யக் கோரி கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த 13ம் தேதி முதல் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.வீடுகள், வியாபார நிறுவனங்கள், சாலைகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கருப்புக் கொடியேற்றப்பட்டு உள்ளது. மேலும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கூடலூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.

கூடலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் தலைமையில்,பாஜ,நாம் தமிழர், எஸ்டிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சங்கம், நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம், இந்திய மோட்டார் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கூடலூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய யானை வழித்தட அறிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.தமிழக அரசின் கவனத்திற்கு மக்களின் கோரிக்கையை எடுத்துச் செல்ல வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

The post வனத்துறை வெளியிட்டுள்ள புதிய யானை வழித்தட வரவு அறிக்கை ரத்து கோரி கோட்டாட்சியரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kotatchiar ,Kudalur ,Pandalur ,Tamil Nadu forest department ,Dinakaran ,
× RELATED கூடலூர் நகராட்சி பகுதியில் சேதம் அடைந்த நடைபாதை