×

உலக சாதனை படைத்த நீச்சல் வீரருக்கு பாராட்டு

தேனி, மே 8: நீச்சலில் உலக சாதனை புரிந்த தேனி மாவட்ட இளம்வீரருக்கு பாராட்டு விழா நடந்தது.இலங்கை தலைமன்னார் முதல் இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான கடலில் சுமார் 30 கிமீ தூரத்தை 10.30 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இளம்நீச்சல் வீரர் ஜெய்ஜஸ்வந்த் நீந்தி கடந்து உலக சாதனை படைத்தார். இம்மாணவருக்கு தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி மற்றும் தேனீ கலை, இலக்கிய மையமும் இணைந்து பாராட்டு விழா நடத்தியது.விழாவிற்கு சவுராஷ்டிரா கல்விக்குழும தலைவர் ஜவஹர்லால், செயலாளர் கலைவாணி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிரபு வரவேற்றார். கட்டிட பொறியாளர் சங்கங்களின் மாநில கூட்டமைப்பு மண்டல தலைவர் நந்தகுமார், எழுத்தாளர் ஆறுமுகம், வீரேந்திரபிரபு, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் ஜெய்ஜஸ்வந்துக்கு பரிசுகளை வழங்கினர்.விழாவின்போது, தடகளப்போட்டியில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்த தேனி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி காவியா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 486 மதிப்பெண்களை பெற்ற மாணவி அருணிஷா, தேனி அனைத்து மகளிர் காவல்நிலைய சப்.இன்ஸ்பெக்டராக சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மீனா ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தேனீ கலை, இலக்கிய மைய நிறுவனர் பாண்டியராஜன், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். முடிவில் சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
தீ வைத்தது யார்?ஆங்கூர்பாளையம் ரோட்டில் உள்ள நகராட்சி பழைய குப்பைக் கிடங்கில் குப்பைகள் அகற்றமுடியாததால் மூடப்பட்டது. பின் கூடலூர் ரோட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 4 ஏக்கர் நிலத்தில் புதிய குப்பைக்கிடங்கு அமைத்தனர். சில ஆண்டுகளில் அங்கும் குப்பை மலைபோல குவிந்தது. இதனால் தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பயோ மைனிங் என்ற திட்டத்தில், இந்த இரண்டு கிடங்கிலும், மலை போல குவிந்துள்ள 67 ஆயிரத்து 400 கியூபிக் மீட்டர் குப்பையை அகற்ற திட்டம் தயாரிக்கப்பட்டு தனியாருக்கு ரூ.4.5 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால் டென்டர் எடுத்தவர்கள் குப்பையை அகற்றாமல் தீ வைப்பதால் நாள்தோறும் குப்பைக்கிடங்கில் தீ எரிகிறது.



Tags :
× RELATED கல்வி உரிமைச்சட்டப்படி மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த கோரிக்கை