×

கல்வி உரிமைச்சட்டப்படி மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த கோரிக்கை

தேனி, மே 28: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அடிப்படைக்கல்வியில் மாணவர்களை சேர்க்க நடக்கும் முறைகேடுகளை களைய வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் முருகன் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவில் கூறியிருப்பதாவது, தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அடிப்படைக்கல்வி வகுப்புகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெற்றோர்களின் குழந்தைகளை இலவசக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்ப்பதில் முறைகேடு நடந்து வருகிறது.

பல பள்ளிகளில் மாணவர்களின் சதவீதத்தை குறைத்து காண்பித்து இலவச கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கையை குறைத்து வருகின்றனர். மேலும், குலுக்கல் முறையில் மாணவ, மாணவியர் தேர்வு என்பதாக கூறுவதிலும் முறைகேடுகள் நடந்து வருகிறது. முறைகேடுகள் இல்லாமல் பள்ளிக்கு அருகாமையில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் உள்ள மாணவ, மாணவியர்களை முறைப்படி பள்ளியில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கல்வி உரிமைச்சட்டப்படி மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Theni ,All India Forward Block Party ,Dinakaran ,
× RELATED பாமாயில், பருப்பு வாங்காதவர்கள் 30ம் தேதிக்குள் பெறலாம்