×

நிலவு முழுவதும் பரவியிருக்கும் பிரம்மாண்ட விரிசல்கள்

நிலவின் பரப்பு நாம் இரவில் பார்ப்பதைப் போல இருக்காது. முழுவதும் மேடு, பள்ளங்கள், மலைகள் தான் அங்கே அதிகம். சமவெளி பரப்புகள் நிலவில் மிகவும் குறைவு. இந்த பள்ளங்கள் எப்படி உருவாகியுள்ளன? என்று கண்டுபிடிக்கப்போன நாசா மற்றொரு அதிர்ச்சியான விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. நிலவு முழுவதும் விரிசல்கள் காணப்படுகிறதாம். லேசான விரிசல்கள் இல்லை இவை. சுமார் 12 கிலோமீட்டர் ஆழம் வரை இந்த விரிசல்கள் காணப்படுவதாக நாசா அறிவித்திருக்கிறது.

பார்க்கவே குண்டும் குழியுமாய் இருக்கும் நிலவின் ஈர்ப்புவிசை, பொருட்களின் அடர்த்தி ஆகியவற்றை தெரிந்து கொள்ள நாசா ஆசைப்பட்டதன் விளைவுதான் GRAIL (Gravity Recovery and Interior Laboratory) என்னும் திட்டம். அதாவது இரண்டு ஆளில்லா விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி அங்குள்ள பாறைகள், மண், தூசுக்கள் போன்ற பொருட்களை சேகரித்து ஆய்வு செய்வது. அதன் அடிப்படையில் அப்பொருட்களின் அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே தன் பரப்பில் வந்துவிழும் பொருட்களினால் அதிக பாதிப்பை அடைகிறது நிலவு.

விண்கற்கள் மற்றொரு கோளின் மீதோ, துணைக்கோளின் மீதோ அல்லது விண்கல்லின் மீதோ கூட மோதுவது இயற்கையே. பூமியின் பரப்பில் உள்நுழையும் விண்கல் வளிமண்டலத்திற்கு உள்ளே நுழைந்தவுடன் உராய்வின் காரணமாக தீப்பிடித்து எரிந்து விடும். மேலும் பூமியில் பெரும்பான்மையான பகுதிகள் கடல் என்பதால் 90% கற்கள் கடலில் விழுந்துவிடும். இதையும் மீறி தரைப்பகுதிக்கு வருபவை தான் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் விண்கல்லினால் பூமியின் மீது ஏற்படும் சேதத்தை விட நிலவில் ஏற்படும் சேதம்தான் மிக அதிகம். அதற்கு ஒரே காரணம் தான். இங்குள்ள புவிஈர்ப்புவிசை.

ஆகவே ஈர்ப்புவிசை அதிகமாக இருந்தால் விண்கல்லினால் ஏற்படும் மோதல்கள் குறைவான பள்ளங்களையும் விரிசல்களையுமே ஏற்படுத்தும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே நிலவில் இப்படியான நில அமைப்பும் இருக்கின்றது. ஆனால் நிலவில் தொடர்ந்து இப்படியான விரிசல்கள் அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என நாசா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : moon ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...