×

கால்நடை மருத்துவ கல்லூரியில் மதிப்பூட்டிய இறைச்சி, உபபொருட்கள் பயிற்சி

நாமக்கல், மே 8: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் மதிப்பூட்டிய இறைச்சி மற்றும் இறைச்சி உபபொருட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறைச்சி அறிவியல் துறை சார்பில், சுகாதரமான இறைச்சி உற்பத்தி, செல்ல பிராணி உணவு உற்பத்தி, இறந்த கால் நடைகளிலிருந்து இறைச்சி தூள் தயாரிப்பு, மதிப்பூட்டிய இறைச்சி பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

ஒரு நாள் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சி கட்டணம் பயிற்சிக்கு தகுந்தவாறு உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுடைய எழுத படிக்கத் தெரிந்தவர்கள், கால்நடை வளர்ப்போர், இளைஞர்கள் தொழில் முனைவோர்கள் இறைச்சி அறிவியல் துறையை தொடர்பு கொள்ளாலம் என நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி