×

முத்துமாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

கிருஷ்ணகிரி, மே 8: கிருஷ்ணகிரியில் நடந்த ஸ்ரீ ராஜகாளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 16ம் ஆண்டு விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் ராஜகாளியம்மன், முத்துமாரியம்மன் கோயில் 16ம் ஆண்டு விழா கடந்த 6ம் தேதி காலை கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், கங்கனம் கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை பெண்களுக்கான சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவின் இரண்டாம் நாளான நேற்று (7ம் தேதி) காலை 7 மணிக்கு கங்கையில் இருந்து பால், தயிர், மஞ்சள், குஞ்குமம், பன்னீர், சந்தனம், இளநீர் ஆகிய தீர்த்தங்களை குடங்களில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு வந்து அம்மனுக்கு அனைவரும் அவரவர்கள் கையால் அபிஷேகம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சுத்தி புண்ணியாவாஜனம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு சக்தி அழைத்தல் பூஜையும், இரவு வீடு, வீடாக சென்று கரகத்திற்கு பூ எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர். 

Tags : Muthuramaniyanam temple ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்