×

கிருஷ்ணன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நாகர்கோவில், மே 8: கிருஷ்ணன்கோவில் வாணிய வைசிய சமுதாய ஊர்வகை உச்சிமாகாளி அம்மன் கோயில் விழாவில் இன்று (8ம் தேதி) மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழா கடந்த 6ம் தேதி காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை ஒழுகினசேரி ஆற்றில் இருந்து முத்துக்குடை அணிவகுப்புடன் யானை மீது புனித நீர் எடுத்து வருதல், சிறப்பு ஹோம பூஜைகள், இரவு தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. நேற்று 2ம் நாள் விழாவில் காலை யாக பூஜைகள், மதியம் தீபாராதனை, மாலை சிறப்பு பூஜைகள், இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நடந்தது.  

3ம் நாள் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், 7 மணிக்கு பூதசுத்தி, 4ம் கால யாகசாலை பூஜை, ஹோமங்கள், 9.15க்கு தீபாராதனை, 9.20க்கு யாத்திரா தானம், கடங்கள் கோயில் வருதல், 9.30க்கு விமான கும்பாபிஷேகம், 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகம், 10.30க்கு மஹா அபிஷேகம், 11 மணிக்கு தீபாராதனை, 11.15க்கு மஹேஸ்வரர் பூஜை, 11.30க்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8.30க்கு தீபாராதனை நடக்கிறது. கொடை விழா ஜூன் 17ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் அம்மனுக்கு அபிஷேகம், வில்லிசை, 2ம் நாள் பொங்கல் வழிபாடு, ஊட்டு படைப்பு, அம்மன் பூச்சட்டி ஏந்தி நகர்வலம் வருதல், 3ம் நாள் (19ம் தேதி) பூப்படைப்பு, மஞ்சள் நீராடுதல், வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags : Umakamali Amman Temple ,Krishnankoil ,
× RELATED பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு...