×

விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படும்: வேளாண் உதவி இயக்குநர் மீனாகுமாரி

பழநி, மே 7: கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படும் என வேளாண் உதவி இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துத் தருவது குறித்து பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மீனாகுமாரி கூறியதாவது:பழநி வட்டாரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் கணினி மூலம் பெறப்பட்ட சிட்டா, சாகுபடி செய்துள்ள பயிர் அல்லது சாகுபடி செய்யப்பட பயிர் விவரங்களுடன் விஏஓவிடமிருந்து பெறப்பட்ட அடங்கல், நில வரைபடம், குத்தகை நிலமாக இருந்தால் 7 ஆண்டுகளுக்கு குத்தகை செய்யப்பட்ட முறையான பதிவு செய்ய குத்தகை ஒப்பந்தம், நீர் ஆதாரத்திற்கான ஆவணம், ஆதார் அட்டை நகல், விவசாயியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Meenakumari ,
× RELATED சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு...