×

3 பேர் படுகாயம் சோழவந்தான் அருகே ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய தேர்பவனி

சோழவந்தான், மே 7: சோழவந்தான் அருகே ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய 107ம் ஆண்டு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பங்குத்தந்தைகளின் சிறப்பு ஜெபமாலை, திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை      இரவு புனித ஜெர்மேனம்மாள் மின் அலங்கார தேரில் ஊர்வலமாக வந்தார். இத்தேருக்கு முன் சேசு, தேவமாதா, சூசை, காவல் சம்மனசு ஆகிய கடவுள்களின் அலங்கார  தேர்களும் வீதிகளில் பவனி வந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானக்காணோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில்  போலீசார் பாதுகாப்பு பணியிலிருந்தனர்.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Riyapoor St. Jermeemanam ,Derpavani ,Cholavanthan ,
× RELATED 13 பேர் டிஸ்சார்ஜ்