×

திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

திருமங்கலம்,  மே 7: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில்  மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் வாகனத்தில் செல்வோர் விபத்துகளில் சிக்கும்  ஆபத்து நிலவுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.திருமங்கலம்  சுற்றுவட்டார கிராம பகுதிகளில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக  செல்கின்றன. குறிப்பாக திருமங்கலத்திலிருந்து சேடபட்டி செல்லும் ரோட்டில்  திரளி, அச்சம்பட்டி, நக்கலக்கோட்டை, கிழவனேரி, மீனாட்சிபுரம், காரியாபட்டி  ரோட்டில் மேலக்கோட்டை, மைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிகவும்  தாழ்வாக மின்வயர்கள் செல்கின்றன. இதனால் லாரிகளில் லோடுகள் ஏற்றிவரும் போது  இந்த கிராமங்களை கடப்பதில் சிரமங்கள் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார்  தெரிவித்தனர்.
 
தாழ்வான மின்கம்பங்களில் உரசி வாகனங்களில்  தீப்பிடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் திருமங்கலம் சுற்றுப்புற கிராம பகுதிகளில் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் லோடுகளுடன் சென்றால்  மின்சார கம்பிகளில் உரசாமல் இருப்பதற்காக கம்பு கொண்டு செல்வதால்  ஆங்காங்கே நிறுத்தி மின்சார வயர் மற்றும் கம்பிகளை கம்புகளால் உயரமாக  தூக்கியபின்பு வாகனங்களை இயக்கவேண்டியிருப்பதாகவும் தெரிவித்தனர்.  மின்வாரியம் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உயரமாக கட்டி வாகனங்கள் சாலையில்  இடையூன்றி செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின்  கோரிக்கையாகும்.

Tags : accident ,areas ,Tirumangalam ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...