×

பாலக்கோடு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தி

பாலக்கோடு, மே 7: பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சி அல்ராஜூகவுண்டர் தெருவில் போதிய சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படுவதால், இப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும், மழை காலங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கழிவு நீர் பாதிப்பு குறித்து பலமுறை ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீரை சுத்தப்படுத்த நிதி இல்லை என்று அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, கழிவு நீரை அகற்ற வேண்டும்,’ என்றனர்.

Tags : balcony ,
× RELATED நானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்