×

காரல் மார்க்ஸ் பிறந்த நாள் விழா

தர்மபுரி, மே 7: தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காரல் மார்க்ஸின் 202வது பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம், மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், காரல்மார்க்ஸ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த கருத்தரங்கில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜூனன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், மாரிமுத்து, ராமச்சந்திரன், கிரைஸாமேரி, விசுவநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karl Marx ,birthday party ,
× RELATED கக்கன் பிறந்தநாள் விழா ₹16.19 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்