×

கோயம்பேடு மார்க்கெட்டில் வாலிபரின் உயிரை காப்பாற்ற போராடிய தமிழ் எழுத்தாளர்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா (44), பிரபல தமிழ் எழுத்தாளர். கோயம்பேட்டில் வசித்து வருக்கிறார். திருமணம் ஆகவில்லை. கவிதை நூல்கள் மற்றும் நாவல் எழுதியுள்ளார். வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட 16 திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது பைரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட் அருகில் நேற்று காலை ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த சடலத்தின் அருகே பிரான்சிஸ் கிருபா இருந்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரான்சிஸ் கிருபாவை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் கோயம்பேடு பழ மார்க்கெட் அருகே ஒரு வாலிபருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. அவருக்கு உதவுவதற்கு அருகில் சென்றேன். அந்த வாலிபரை காப்பாற்ற முயற்சி செய்தேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் நின்றிருந்தேன், என்றார்.

போலீசார் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கிருபா கூறிய தகவல் உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனையில் வலிப்பு நோயால் மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் உயிர் இழந்ததும் தெரியவந்தது. முதலில் எழுத்தாளரை சந்தேகப்பட்ட போலீசார், பின்பு வடமாநில வாலிபரை காப்பாற்ற முயன்ற அவரது சேவையை பாராட்டி விடுவித்தனர். மேலும் இறந்த வாலிபர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

Tags : Koyambedu ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள்...