×

அறந்தாங்கி அருகே அய்யனார் கோயிலில் குதிரை விடுப்பு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை, மே 7: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அருகே புதுவாக்காடு முத்து வீரப்பெருமாள் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா விமரிசையாக நடந்தது. இதில் ஊர்ப் பெரியவர்கள் மற்றும் கிராம மக்கள் மழை வேண்டி விரதமிருந்து நேர்த்திக்கடனாக கீழ்க்குடி வேளாளர் தெருவில் அய்யனார், காளியம்மன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சிலைகளை அலங்கரித்து மாடு, குதிரையில் வைத்து 5 கி.மீ தூரம் வேனில் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. குதிரை எடுப்பு விழாவில் சுற்று வட்டார பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags : devotees ,horse ceremony ,Aiyanar temple ,Aranthangi ,
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்