×

கந்தர்வகோட்டை பகுதிக்கு இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

கந்தர்வகோட்டை,ஜூன் 12: கந்தர்வகோட்டை பகுதியில் இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகர் சட்டமன்ற தொகுதியின் தலை நகர் ஆகும். இங்கு அரசு தலைமை மருந்துவமனை, புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வீரடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை உள்ளது.

இப்பகுதிகளில் ஏற்படும் சாலை விபத்து, விஷ சந்துகள் தீண்டுதல் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற இம்மருந்துவமனை வருபவர்கள் மரணம் அடைந்தல், உடற்கூறு ஆய்வு செய்ய புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டிய சூழல் உருவாகிறது.

இவ்வாறு இருக்கும் போது கந்தர்வகோட்டை நகரை மையமாக வைத்து இலவச அமரர் ஊர்தி அரசு வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவசர தேவைக்கு புதுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை வரும் வரை பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து உடனடி தீர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கந்தர்வகோட்டை பகுதிக்கு இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kandarvakottai ,Kandarvakota ,Pudukkottai District ,Kandarvakota Nagar Assembly Constituency ,Government ,Chief of Medicine ,Government of Pudunagar ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள...