×

முள்ளுக்குறிச்சி அரசு பள்ளியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

செந்துறை, மே 7: செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் தலைமையாசிரியர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்து வருகிறது. முகாமில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 25 மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. கோடைகால பயிற்சியில் வாள் சண்டை, சிலம்பம், டேபிள் டென்னிஸ், கபடி, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் ராஜசேகரன் பயிற்சி அளித்து வருகிறார்.
இதனால் மாணவர்கள் உடற்திறன் பெறுவதோடு பல்வேறு போட்டிகளில் வென்று வருகின்றனர். கடந்த குடியரசு தினவிழா போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் வெற்றி பெற்று இருமுறை மாநில அளவில் விளையாடியுள்ளனர். இதன்மூலம் இந்தாண்டு 12ம் வகுப்பு தேர்வெழுதிய 12 மாணவர்களுக்கு உயர்கல்வியில் இலவசமாக (ஸ்போர்ட்ஸ் கோட்டா) சேர்ந்துள்ளனர், கோடைகால விளையாட்டு போட்டியில் அருகிலுள்ள 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்ற பெற்று வருகின்றனர்.




Tags : Summer Sports Training Camp ,Mullukurichi Government School ,
× RELATED கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்...