×

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ராம் பள்ளி மாணவர்கள் 100சதவீத தேர்ச்சி

அரூர், மே 3: கம்பைநல்லூர் ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி வித்யா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், மாணவன் சக்திவேல் 491 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், மஞ்சுபிரியா 489 மதிப்பெண் பெற்று 3ம் இடமும் பெற்றுள்ளார். 490க்கு மேல் 2 பேர், 480க்கு மேல் 11 பேர், 470க்கு மேல் 25 பேர், 450க்கு மேல் 43பேர், 400க்கு மேல் 90 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதே போல் இப்பள்ளியில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் 98, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 99, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், மாணவர்களின் வெற்றிக்கு காரணமான ஆசிரியர்களையும், கல்வி குழுமத்தின் நிறுவனர் வேடியப்பன், பள்ளி தாளாளர் சாந்திவேடியப்பன், நிர்வாக இயக்குநர் தமிழ்மணி, முதல்வர்கள் ஜான்இருதயராஜ், சாரதி மகாலிங்கம், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags : aram ,school students ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...