×
Saravana Stores

செங்குட்டை கிராமத்தில் சேதமடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

அரூர், மே 3: பாப்பிரெட்டிப்பட்டி அருகே செங்குட்டை சமத்துவபுரத்தில் சேதமடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். மொரப்பூர்- கம்பைநல்லூர் சாலையில் செங்குட்டை சமத்துவபுரம் அருகே நிழற்கூடம் உள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சில நபர்கள் இரவு ேநரங்களில், நிழற்கூடத்தை மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகளை சேதப்படுத்தியதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிழற்கூடத்தில் பராமரிப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என, பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Chengundi ,
× RELATED அண்ணன் சொத்து பிரித்து தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை