×

தர்மபுரி மார்க்கெட்டிற்கு செந்தூரா மாம்பழம் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி, மே 3: தர்மபுரி நகரில் உள்ள மார்க்கெட்டிற்கு, செந்தூரா ரக மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா, நீலம், செந்தூரா, அல்போன்சா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிக பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வேறு சில ரகங்களும், குறைந்த பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மா அறுவடை தொடங்காத நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் இருந்து தர்மபுரி நகருக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு அதிகளவில் வரத்தொடங்கியுள்ளன. தர்மபுரி மார்க்கெட்டில் பீத்தர் ரக மாம்பழம் கிலோ ₹60, செந்தூரா ரகம் ₹65, மல்கோவா ₹80, அல்போன்சா ₹120 என விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Tags : Senthura ,Dharmapuri ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு