×

பெரம்பலூர் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த கிர்னி பழம் விற்பனை ஜோர்

பெரம்பலூர், மே 3: பெரம்பலூர் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த கிர்னி பழம் விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. சித்திரை மாத கோடை வெயில் கடுமையாக அடித்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் பகுதியில் சூட்டை தணிக்கும் கிர்னி பழ விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. மரக்காணத்தில் இருந்து பெரம்பலூருக்கு அதிகளவில் கிர்ணி பழம் விற்பனைக்காக வந்துள்ளது. மருத்துவ குணம் கொண்டது கிர்னி பழம். கோடை காலத்துக்கேற்ற உணவாகும்.

கிர்னி பழத்தின் ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதியில் ஊட்டச்சத்துகளான வைட்டமின் பொட்டாசியம், மாங்கனீஸ் நிறைந்துள்ளன. சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை வைட்டமின் ஏ மீட்டமைப்பின் மூலம் ஓரளவு சீர் செய்யு முடியும். கிர்னி பழம் சாப்பிடுவதால் உடல்நல அமைப்பு, நுரையிலின் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கும். தலைசிறந்த உணவுகளில் கிர்னி பழமும் ஒன்றாகும். கண்ணின் விழித்திரை சேதமடையாமலும், பார்வை குறைவு ஏற்படுவதை கட்டுப்படுத்தவும்  உதவுகிறது. மேலும் நார்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பலனளிக்க கூடியதாகும், மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கும் நல்லதாகும்.

பழுத்த கிர்னி பழத்தை எளிதாக காம்பிலிருந்து பிரித்தெடுக்க முடியும். காம்பின் முனையில் நுகர்ந்து பார்க்கும்போது மஸ்க் வாசனை வராவிட்டால் அது பழுக்காத கிர்னிபழமாக இருக்கக்கூடும் என்பதை நன்றாக பார்த்து வாங்க வேண்டும். கிர்னி பழத்தை வெட்டிய உடனே கிர்னி பழத்தை சாப்பிட்டுவிட வேண்டும். இத்தகைய சிறப்பான கோடை காலத்துக்கேற்ற கிர்னி பழம், மரக்காணத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் பெரம்பலூர் பகுதிக்கு அதிகளவில் விற்பனைக்காக வந்துள்ளன. பெரம்பலூர் பகுதியில் ஒரு  கிலோ கிர்னிபழம் ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : area ,Perambalur ,Jor ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...