×

கம்பம் பள்ளத்தாக்கில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

உத்தமபாளையம், மே 3: கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம், ஆனைமலையன்பட்டி, அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கடந்த 1 வாரத்திற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரம் வாழைகள் சாய்ந்துள்ளன. மழை இல்லாமல் விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் இருக்கும் வேளையில் கஷ்டப்பட்டு பாதுகாத்த வாழைகள் அனைத்தும் ஒரே காற்றில் அடியோடு சாய்வதும், இதற்கு விலை இல்லாத சூழலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நம்பி பயிரிட்ட வாழைக்கு உரிய விலை இல்லாமல் போனதால் விவசாயிகள் வேதனையின் விளிம்பில் உள்ளனர். வாழை மரங்கள் காற்றுக்கு சாய்வதால் விவசாயிகள் தாங்கள் நம்பி வாங்கிய கடனை தற்போது அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுடன்,

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ``மழையே பெய்யவில்லை ஆனால், காற்று அடித்தவுடன் வாழைகள் சாய்கின்றன. எனவே, உடனடியாக சாய்ந்த வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழை பெய்யாத நிலையில் காற்றுக்கே வாழைகள் சாய்வது வேதனையிலும் வேதனையாக உள்ளது’’ என்றனர்.

Tags : pole valley ,
× RELATED கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்...