×

கூட்டு பட்டா நிலத்தை அளக்க வந்த மாநகராட்சி சர்வேயரிடம் தகராறு போலீசார் சமரசம்

திருப்பூர், மே 1: திருப்பூர், போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்(41). இவர், திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், ஆனந்த் என்பவருக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 30 வருட குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த இடத்தில் ஐயப்பன் 54 மாடுகளை வைத்து கோசாலை அமைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த பகுதி முழுவதும் மொத்தமாக உள்ள 1.16 ஏக்கர் இடத்திற்கு முழு பாத்தியாதிபதியான மோகன், பூபதி தங்களது இடத்தை அளந்து கொடுக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார். இந்த 1.16 ஏக்கர் இடம் கூட்டுபட்டாவாக இருப்பதாகவும், இந்த பட்டாவில் விஸ்வநாதன், ஆன்ந்திற்கு 70 சென்ட் நிலம் உள்ளதாகவும் கூறி நேற்று இந்த இடத்தை அளப்பதற்காக மாநகராட்சி சர்வேயர் வந்தபோது 20 பேரை அழைத்து வந்து தகராறில் ஈடுபட்டார். தகலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : patta land ,
× RELATED பட்டா நிலத்தில் புதைத்த சடலத்தை...