×

10ம் வகுப்பு பொது தேர்வில் தாராபுரம் விவேகம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

தாராபுரம், மே 1: 10ம் வகுப்பு பொது தேர்வில் தாராபுரம் விவேகம் பள்ளி மாணவ,மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மகிந்சித்தார்த் என்ற மாணவன் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடம் பெற்றுள்ளார், மாணவி ஸ்ரீநிதிவர்சா 491 மதிப்பெண் பெற்று 2ஆம் இடத்தையும், கிருத்திகா என்ற மாணவி 488 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 பாடவாரியாக 15 மாணவ,மாணவிகள் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 490 மதிப்பெண்க்கு மேல் 2 மாணவர்களும், 480க்கு மேல் 13 மாணவ,மாணவிகளும், 450க்கு மேல் 82 மாணவ,மாணவிகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து சாதனை படைத்த மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் சுப்ரமணியன், செயலாளர் பூபதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் கனகராஜ், நடராஜன், விஜயகுமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Dharapuram Vivekanam School ,examination ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்