×

10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வடமங்கலம் பகவான் ராமகிருஷ்ணா ஆங்கில பள்ளி சாதனை



வில்லியனூர், மே 1:  வில்லியனூர் அடுத்த வடமங்கலம் பகுதியில் உள்ள பகவான் ராமகிருஷ்ணா ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி, தொடர்ந்து 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கிராமப்புற பள்ளிகளில் சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளியளவில் மாணவர்கள் மோகன்ராஜ் 461 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், முகமது அப்பாஸ் 460 மதிப்ெபண்கள் பெற்று 2ம் இடமும், அரவிந்தன் 451 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பிடித்துள்ளனர்.

 450 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்களும் பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 91 மதிப்பெண்களும், கணிதத்தில் 97 மதிப்பெண்களும், அறிவியலில் 93 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.சாதனை மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் சிவசுப்பிரமணியன் பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.


Tags : Bhagwan Ramakrishna ,English ,examination ,
× RELATED பதவியை ராஜினாமா செய்தால் அது தவறான...