×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கரிக்கலாம்பாக்கம் அருணை ஆங்கில பள்ளி 100 சதவீத தேர்ச்சி

வில்லியனூர், மே 1:  வில்லியனூர் அடுத்த கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள அருணை ஆங்கில உயர்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியளவில் மாணவி தரணி 480 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவன் பிரதீப் பாலன் 474 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவி பிரியா 465 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பிடித்துள்ளனர். அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 98 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்ெபண்களும், சமூக அறிவியலில் 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் சந்தானம், மேலாளர் தமிழ் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : pass ,School ,Karikalampakkam Araku English ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் கண்முன் சாலையை கடந்த சிறுத்தை