×

அரியலூர் மாவட்டத்தில் அதிவேகமாக லாரிகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எஸ்பி எச்சரிக்கை

அரியலூர், மே 1: அரியலூர் மாவட்டத்தில் அதிவேகமாக லாரிகளை இயக்கினால்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் எஸ்பி ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்தார். அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் அனைத்து சிமென்ட் ஆலை நிர்வாகிகளுடன் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எஸ்பி ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், அனைத்து சிமென்ட் ஆலைகளும் தங்களது சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் முதலில் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரோந்து வாகனத்தை அமைத்து லாரிகள் எந்த வேகத்தில் செல்கிறது என்று கண்காணித்து நடவடிக்கை எடுக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காதபட்சத்தில் டிரைவர்களின் உரிமத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அவர் எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரியாத வகையில் டிரைவர் உரிமத்தை முற்றிலுமாக முடக்கி வைக்கப்படும். அதற்காக புதிதாக சாப்ட்வேர் அமைக்கப்படும். வி.கைகாட்டி நான்கு சாலை சந்திப்பில் சிமென்ட் ஆலை நிர்வாகம் கண்டிப்பாக சிக்னல் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலன லாரி டிரைவர்கள் சீருடை அணியாமல் லாரிகளை இயக்கி வருகின்றனர். இதை சிமென்ட் ஆலை நிர்வாகத்தினர் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து சிமென்ட் ஆலை நிர்வாகிகளிடம் ஆலோசனைகளை கேட்டறிந்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா, ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் சிமென்ட் ஆலை நிர்வாகிகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்கள், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags : SBI ,Ariyalur district ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...