×

பெரம்பலூரில் அதிமுக முக்கிய பிரமுகர் மீது பாலியல் புகார் ஆடியோ ஆதாரம் வெளியிட்ட வக்கீல் திடீர் கைது

பெரம்பலூர், மே 1: பெரம்பலூரில் பொள்ளாச்சி போல் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்து பெண்ணின் ஆடியோ ஆதாரம் வெளியிட்ட வழக்கறிஞர் அருள் வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திடீரென கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடமிருந்த செல்போனை பறித்து அதிலிருந்த ஆதாரங்களை போலீசாரே அழித்ததாக குற்றம் சாட்டி உள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷா மித்தலிடம் கடந்த 21ம் தேதி நாம்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் என்பவர் கொடுத்த புகாரில், பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்புணர் வைப் போன்று, பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரம்பலூர் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரும், போலி நிருப ரோடு இன்னும் சிலரும் குழுவாக ஈடுபட்டுள்ளதாகவும், பல குடும்பப் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று தங்களின் ஆசைக்கு இணங்க வைத்து, அதனை வீடியோ எடுத்து வைத்து கொண்டு தொல்லை கொடுத்து வந்தது தெரிய வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து எஸ்பி திஷாமித்தல் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை தனது புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் 25ம் தேதி பாதிக்கப்பட்ட பெண், தன்னிடம் பேசிய ஆடியோவை அருள் வெளியிட்டார். இதில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக இன்டர்வியூவுக்கு வர வேண்டும் என ஓட்டலுக்கு அழைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டு, அதனை வீடியோவாகப் படம்பிடித்து வைத்துக்கொண்டு, ஆளுங்கட்சி பிரமுகரிடம் சென்றால் வீடியோவை தருவதாகக்கூறி மிரட்டியதாக பேசியது இடம் பெற்று இருந்தது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி, அதிமுக மகளிரணி, வழக்கறிஞர்கள் நலச்சங்கங்கள் சார்பில் அடுத்தடுத்து வழக்கறிஞர் அரு ளுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டு ள்ளது. அதேநேரம் அதிமுக பிரமுகர் மீதான பாலியல் புகாரை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி சிபிஐ மூலம் வழக்குப்ப திவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் புகார் தரப் பட்டிருந்தது.

இதனிடையே நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞரணி சார்பாக மூத்த வழக்கறிஞர் பாலு தலைமையில் சென்னை பிரஸ் கிளப்பில் 28ம்தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பெரம்ப லூர் பாலியல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், இல்லையேல் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் எனத் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று (1ம் தேதி) சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிபிஐ விசாரணை கோரி முறையிட இருந்த நிலையில், நேற்று மாலை குன்னம் டீக்கடையில் நின்று கொண்டிருந்த வழக்கறிஞர் அருளை பெரம்பலூர் தனிப்படை இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி திடீரென கைது செய்தார்.

பின்னர் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வராமலேயே அலைக்கழித்தார். பிறகு பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் வழக்கறிஞர் அருளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அருளை அழைத்து வந்த போலீசார் அவர் மீது வழக்கறிஞர்கள் காமராசு, ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் கொடுத்த புகாரின்பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு வழக்கறிஞர் அருள் தெரிவித்ததாவது:  இதுவரை என்மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றே தெரியவில்லை. போலீசார் பதில் சொல்லவும் இல்லை. கைது செய்தவுடன் என் செல்போனை பறித்த போலீசார் அதிலிருந்த சில வழக்கு தொடர்பான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை டெலிட் செய்து விட்டனர். இதனை 3 நாட்களுக்கு முன்பே எதிர்பா ர்த்தேன். நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோம். குற்றம் சாட்டப்ப ட்டவர்களுக்கு பயந்து கொண்டு, காவல்துறை அடிமையாக நடந்து கொண்டு என்னைக் கைது செய்திருக்கிறது என கூறினார்.

வழக்கறிஞர் அருள் கைது செய்யப்பட்ட தகவலறிந்து பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் முகமது இலியாஸ் உள்ளிட்ட வழகறிஞர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் அருளைப் பார்க்க போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கறிஞர் முகமது இலியாஸ் கூறுகையில், ஒரு வழக்கறிஞரை என்ன வழக்கு என்றே சொல்லாமல் கைது செய்திருப்பது இதுவே முதல்முறையாகும். கைதான வழக்கறிஞரை சந்திக்க விடாமல் போலீசார் மறுப்பது மனித உரிமை மீறலாகும். அருளுக்கு ஆதரவாக சங்கத்தின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து நாளை(வியாழக்கிழமை) முடிவு செய்து தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags : arrest ,lawyer ,AIADMK ,Perambalur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...