×

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் ஒரே நாளில் 40 பேர் வேட்பு மனு தாக்கல்

கரூர், ஏப். 30: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 80க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் நேற்று காலை 11 மணி முதல் 3 மணி வரை அடுத்தடுத்து வேட்பாளர்கள் வந்து வேட்புமனு தாக்கல் செய்த வண்ணம் இருந்தனர்.

26ம் தேதி வரை இந்த தொகுதியில் 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டும் நிலை உள்ளது. வேட்புமனு பரிசீலனை மற்றும் வாபஸ் போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு தான் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள் என தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Aravakurichi ,
× RELATED கடும் வெயிலால் வறண்டு கிடந்த கொத்தப்பாளயம் தடுப்பணை நிரம்பி வழிகிறது