×

சர் ஐசக் நியூட்டன் கலை அறிவியல்

கல்லூரி 9ம் ஆண்டு விழா நாகை, ஏப்.30: நாகை சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9வது ஆண்டு விழா கடந்த 13ம் தேதி  நடைபெற்றது. வணிகவியல்துறை தலைவர் ரமேஷ் வரவேற்றார். 2018-2019ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை முதல்வர் டாக்டர் நிறைமதி வாசித்தார். தாளாளர் ஆனந்த், செயலாளர் மகேஸ்வரன், இயக்குனர் சங்கர், ரோட்டரி கிளப் அசிஸ்டெண்ட் கவர்னர் முத்தையா  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  

சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் உத்திராபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத் தேர்வில்  100 சதவீதம் தேர்ச்சி  பெற்றுத்தந்த பேராசிரியர்களுக்கு தங்க நாணயமும், சான்றிதழும் தாளாளர் வழங்கினார். கல்லூரியில் கணினிஅறிவியல் துறை சார்ந்த மூன்றாமாண்டு பயிலும் பிரபாகரன்  “என்னை ஈர்த்த  தொல்காப்பியம்” என்ற தலைப்பிலும், மூன்றாமாண்டு உணவு மேலாண்மைத்துறை சார்ந்த வெங்கட்ராமன் “எது சுதந்திரம்” என்ற தலைப்பிலும், மூன்றாமாண்டு கணினிஅறிவியல் துறை மாணவி அபிராமி “பறக்க துடிக்கும் மனசு” என்ற தலைப்பிலும், மூண்றாமாண்டு கணிதவியல் துறை மாணவி கிருத்திகா “சொர்கத்தின் சுவாரசியங்கள்” என்ற தலைப்பிலும், மூன்றாமாண்டு உணவு மேலாண்மைத்துறை மாணவன் அப்துல் இஜாஸ் அகமது “புற்றுநோய் நிவாரணி” என்ற தலைப்பிலும் எழுதிய நூல்களை கல்லூரி தாளாளர் வெளியிட்டு மாணவர்களுக்கு பரிசுத்தொகைகளை வழங்கினார். நிர்வாக அலுவலர் குமார் வரவேற்று அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags : Isaac Newton ,
× RELATED சர்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் உலக போதை பொருள் ஒழிப்பு தினம்