×

சேரம்பாடி டேன்டீ பகுதியில் குடிநீர் கிணறு அமைத்தும் பயன் இல்லை

பந்தலூர், ஏப். 28:   பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ சரகம் மூன்று லைன் பகுதியில் குடிநீர் கிணறு அமைத்தும் மக்களுக்கு பயன் இல்லை. சேரங்கோடு ஊராட்சி சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் மூன்று மற்றும் இரண்டு பகுதிகளில் குடிநீர் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அதனால் அப்பகுதியில் உள்ள டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் எம்எல்ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் கூடலூர் திமுக., எம்எல்ஏ., திராவிடமணி அப்பகுதியில் ஆய்வு செய்து எம்எல்ஏ., மேம்பாட்டு நிதி மூலம் ரூ.4.5 லட்சம் மதிப்பில் சேரம்பாடி டேன்டீ சரகம் 3 பகுதியில் கிணறு மற்றும் மின்மோட்டார் அறை அமைக்கப்பட்டது.  இந்த பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும், இது வரைக்கும் தொழிலாளர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : area ,Cherambadi Dandeli ,
× RELATED முகப்பேர் பகுதியில் பல்லி கிடந்த...