×

.சூலூர் இடைத்தேர்தல் அரசு ஊழியர்களுக்கு இன்று முதற்கட்ட பயிற்சி

கோவை, ஏப். 28: கோவை மாவட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 8 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 1500 அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி இன்று சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
 இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், பயிற்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது, ஒப்புகை சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள், வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துணை கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் பயிற்சிகளை வழங்குவார்கள் என்றனர்.


Tags : Sulur ,lapse elections ,government employees ,
× RELATED 2 மகளுடன் குட்டையில் மூழ்கி பூசாரி பலி