×

திமுக அமோக வெற்றி சோமனூரில் கொண்டாட்டம்

 

சோமனூர், ஜூன் 5: தமிழகத்தில் இந்தியா கூட்டணி அபாரமாக வெற்றி பெற்று 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் நேற்று சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.  கிட்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி.சந்திரசேகர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பின்பு வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழக முழுவதும் வெற்றி பெற வியூகம் அமைத்து தேர்தல் பணி ஆற்றி இந்தியாவே திரும்பிபார்க்கும் விதமாக சிறந்த வெற்றியை பதிவு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மத்தியில் சிறந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்து மக்களிடம் கொண்டு சென்ற அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து கிட்டாம்பாளையத்தில் ஊராட்சி தலைவர் விஎம்சி.சந்திரசேகர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

The post திமுக அமோக வெற்றி சோமனூரில் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Somanur ,Tamil Nadu ,All India Alliance ,Karumathambatti ,Panchayat Council ,Kittampalayam Panchayat Vadukapalayam ,
× RELATED திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும்...